அண்மையில் மக்கா உம்முல் குறா பல்கலைக் கழகத்தில். இஸ்லாமிய கொள்கை (அகீதா) துறையில் அதி விஷேட தரத்தில் கலை முதுமானிப் பட்டம் பெற்று வெளியாகியதை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தாறுல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டதோடு நினைவுச் சின்னங்களும், அன்பளிப்புகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.