மருதமுனை தாறுல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் சுல்லூரியின் இரண்டாவது பட்ட மளிப்பு விழா கல்லூரி நிறைவேற் றுக் குழுத் தலைவர் வைத்திய சுலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.பணிப்பாளர் கல்லூரியின் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி பட்டங்களை வழங்கி வைத்தார். சனி, ஞாயிறு (28,29) ஆகிய தினங் களில் இரு அமர்வுகளாக இடம் பெற்ற நிகழ்வுகளில் மௌலவியா நூறுல் ஐன் இஸ்மாயில், ஓய்வு நிலை ஆசிரியை திருமதி முனவ் வறா இஸ்மாயில் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண் டனர். முதலாம் நாள் அமர்வில் 212 மாணவிகளும் இரண்டாம். நாள் அமர்வில் 207 மாணவர்களு மாக 419 மாணவர்கள் பட்டங்க ளைப் பெற்றுக் கொண்டனர்.