எமது இலங்கை தாய் நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்தச் செய்தியினை வெளியிடுவதில் நாம் மிக்க மகிழ்வுறுகின்றோம்.
இன, மத, மொழி பேதம் பாராது இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக எம் முன்னோர் உழைத்ததன் விளைவாக நாடு சுதந்திரம் அடைந்தது.
சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூக மக்கள் அவர்களின் தலைவர்களின் கீழ் ஒன்றுபட்டு பெற்றுத் தந்த இந்த சுதந்திர நாட்டில், ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழ்வதுடன், இன முரண்பாடுகள், வன்செயல்கள், மத நிந்தனைகள் இன்றி நாட்டின் முன்னேற்றத்திற்காக இதயசுத்தியுடன் பாடுபடுவது அவசியமாகும்.
நாட்டு மக்கள் அனைவருடனும் ஒன்றுபட்டு நாட்டில் இன ஐக்கியம், புரிந்துனர்வு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காகப் பணியாற்ற தாறுல் ஹுதா தயாராக இருப்பதுடன், நாட்டில் அனைத்து சமூகங்களும் சகல உரிமைகளும், வளமும், வாழ்வும் பெற்று ஒற்றுமையாக வாழவும் நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்படவும், கொவிட் 19 தொற்றிலிலிருந்து நாடு விரைவாக மீளவும் பிரார்த்திக்கின்றது.
நிருவாகம்
தாறுல் ஹுதா மகளிர் அறபுக் கல்லூரி – மருதமுனை
04/02/2021